அரியலூரில் 53, கரூரில் 51, மயிலாடுதுறையில் 36, நாகையில் 32, பெரம்பலூரில் 27, புதுக்கோட்டையில் 71, தஞ்சாவூரில் 239, திருவாரூரில் 60, திருச்சியில் 185 என மத்திய மண்டலத்தில் 754 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரியலூர், திருவாரூர் தலா 3, நாகை 2, பெரம்பலூர் 1, புதுக்கோட்டை 7, தஞ்சாவூர் 30 என 46 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மயிலாடுதுறை, கரூர், திருச்சியில் உயிரிழப்பு இல்லை.
காரைக்கால் மாவட்டத்தில் நேற்று பெறப்பட்ட 660 பரிசோதனை முடிவுகளில் 27 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார்.