திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி யம்மன் கோயிலில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை குறித்த ஒத்திகை நடைபெற்றது. திருநெல்வேலி மண்டல இணை ஆணையர் செல்வராஜ், உதவி ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ் மற்றும் நெல்லையப்பர் கோயில் செயல் அலுவலர் ராம ராஜா ஆகியோர் முன்னிலையில், கோயில் பணியாளர்கள் அனைவருக்கும் தீயணைப்பு வீரர்களால் பயிற்சி அளிக்கப்பட்டது.