சாலையோர வியாபாரிகளை முழுமையாக வியாபாரம் செய்ய அனுமதிக்கக் கோரி, ஏஐடியுசி மாவட்ட தெரு வியாபார தொழிலாளர் சங்கத்தினர், கோவில்பட்டியில் நகராட்சி அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
`கரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் சாலையோர வியாபாரிகள், தொடர்ந்து வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். வியாபாரச் சான்று, பயோ மெட்ரிக் அடையாள அட்டை வழங்க வேண்டும். தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சட்டம் மற்றும் விதிகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்மாவட்டச் செயலாளர் அழகுமுத்துப்பாண்டியன் தலைமை வகித்தார். நகரச்செயலாளர் சரோஜா, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் பரமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெரு வியாபார தொழிலாளர் சங்கத் தலைவர் ஜோசப், செயலாளர் பால்பாண்டியன் ஆகியோர் பேசினர்.