குடியாத்தத்தில் புதிதாக டாஸ்மாக் மதுபானக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
குடியாத்தம்-காட்பாடி சாலை யில் உள்ள ஆசிரியர் காலனி, பாண்டியன் நகர், சொர்ணலட்சுமி கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட குடும் பத்தினர் வசித்து வருகின்றனர். அரசு அதிகாரிகள், ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் என சுமார் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் வசித்து வரு கின்றனர்.
இங்குள்ள தனியார் பெட் ரோல் பங்க் அருகில் தனி நபர் ஒருவருக்குச் சொந்தமான காலிமனையை வாடகைக்கு எடுத் துள்ள நபர் தற்காலிக கூடாரம் அமைத்துள்ளார். அந்த இடத்தில் பாருடன் கூடிய டாஸ்மாக் கடையை திறக்க நடவடிக்கை எடுத்துள்ளார். அங்கு கடையைதிறப்பது குறித்து டாஸ்மாக் அதிகாரிகளும் ஆய்வு நடத்தியுள்ளார்.
அந்த இடத்தில் விரைவில் டாஸ்மாக் கடை திறக்கப்படவுள்ள தகவல் நேற்று தெரியவந்தது. இதையடுத்து, சுமார் 50-க்கும் மேற்பட் டோர் திரண்டு புதிதாக அமைய உள்ள டாஸ்மாக் கடையின் முன்பாக திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகலறிந்த குடியாத்தம் நகர காவல் நிலைய ஆய்வாளர் சீனிவாசன் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அருகில் கோயில் இருப்பதால் டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது என பொதுமக்கள் கோரினர்.
அவர்களை சமாதானம் செய்த காவல் ஆய்வாளர் வருவாய்த் துறை அதிகாரிகளுடன் பேசி டாஸ்மாக் மதுபானக் கடை வராமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதனையேற்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.