Regional01

உழவர் சந்தை திறப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி :

செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், காட்பாடி,வேலூர் டோல்கேட், காகிதப்பட்டறை பகுதியில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. கரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட உழவர் சந்தை களை தொற்று பரவல் குறைந்துள்ளதால், மீண்டும் திறக்க ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, காட்பாடி உழவர் சந்தை காந்திநகர் டான்பாஸ்கோ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்திலும், வேலூர் டோல்கேட் உழவர் சந்தை தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்திலும், குடியாத்தம் உழவர் சந்தை நகராட்சி மேல் நிலைப்பள்ளி மைதானத்திலும், காகிதப்பட்டறை உழவர் சந்தை அதே இடத்திலும் இயங்க நேற்று காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை இயங்கியது. உழவர் சந்தைகள் மீண்டும் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT