ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இளைஞர்களை கைது செய்த காவல் துறையினர். 
Regional02

ராணிப்பேட்டை மாவட்டத்தில் - 16 இரு சக்கர வாகனங்களை திருடிய இருவர் கைது :

செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை, சிப்காட், வாலாஜா, ஆற்காடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் அதிகளவில் இரு சக்கர வாகனங்கள் திருடுபோயுள்ளன.

இதையடுத்து, ராணிப் பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் சாலமன் ராஜா தலைமையில் தனிப்படையினர் வாகனத் தணிக்கையை தீவிரப்படுத்தினர். அதன்படி, காரை கூட்டுச்சாலை சந்திப்பில் சாலமன் ராஜா தலைமையிலான காவலர்கள் நேற்று முன்தினம் மாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, உரிய வாகன ஆவணங்கள் இல்லாமல் வந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

அவர், வேலூர் கொசப் பேட்டை பகுதியைச் சேர்ந்த ஷகில் (29) என தெரியவந் தது. அவர் கூறிய தகவல் முன்னுக்குப்பின் முரணாக இருந் ததால் தனியாக அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில், அவர் ஓட்டி வந்த வாகனம் ராணிப்பேட்டையில் திருடியதாக கூறினார். மேலும், திருடிய வாகனங்களை வேலூர் பிடிசி ரோட்டைச் சேர்ந்த மெக்கானிக் பையாஸ் (21) என்பவரிடம் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

இதையடுத்து, பையாஸை கைது செய்த காவல் துறையி னர் அவரிடம் இருந்து 15 வாகனங்களை பறிமுதல் செய்த னர். காவல் துறையினரிடம் முதல் முறையாக சிக்கியுள்ள ஷகில், பையாஸ் தரப்பினரிடம் இருந்து ரூ.3.20 லட்சம் மதிப்பிலான 16 இரு சக்கர வாகனங்களை நேற்று பறிமுதல் செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT