Regional02

நிலுவை ஊதியம் வழங்கக் கோரி தூய்மை பணியாளர்கள் போராட்டம் :

செய்திப்பிரிவு

திருப்பூர் மாநகராட்சியில் 1500-க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த தூய்மை பணி யாளர்களாக உள்ளனர். இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த ரூ.510 தினசரி ஊதியம் வழங்க வேண்டும், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யும் இபிஎப், இஎஸ்ஐ தொகைக்கு முறையான ஆவணங்களை பராமரிக்க வேண்டும்,

மாதந்தோறும் முறையாக ஊதியம் வழங்குவதுடன், குடும்பத்தினர் மிகுந்தசிரமப்படுவதால் மூன்று மாத நிலுவை ஊதியத்தையும் வழங்க வேண்டும், என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் மாவட்ட ஊரக ளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம்(சிஐடியு) தலைமையில், திருப்பூர்மாநகராட்சி அலுவலகத்தின் முன்பு தூய்மைப் பணியாளர்கள் ஏராளமானோர் திரண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிஐடியு சங்க மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் தலைமை வகித்தார். இதன் தொடர்ச்சியாக, பேச்சுவார்த்தை நடத்த சிஐடியு நிர்வாகிகளை மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி அழைத்தார். பேச்சுவார்த்தையின் முடிவில், உடனடியாக இன்று (ஜூலை2) அனைத்து மண்டலங்களிலும் உள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களின் ஊதிய நிலுவையில் தலா ரூ.10 ஆயிரத்தை பட்டுவாடா செய்வதாகவும், பிடித்தம் செய்யும் தொகைக்கு ஆவணங்கள் பற்றி ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாகவும், ஆட்சியர் அறிவித்த சம்பளம் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் ஆணையர் உறுதியளித்தார். இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

உதகை

SCROLL FOR NEXT