மேட்டூர் அணை நீர்மட்டம் 84.45 அடியாக சரிந்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையை பொருத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு விநாடிக்கு 5,130 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 4,123 கன அடியாக குறைந்தது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி திறந்து விடப் பட்டுள்ளது. நேற்று முன்தினம் 85.35 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 84.45 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 47.49 டிஎம்சி-யாக உள்ளது.