புதுச்சேரியில் இருந்து மேட்டூருக்கு நேற்று காலை யூரியா நிறுவனத்தில் பயன்படுத்த கூடிய ஆசிட்டை ஏற்றி கொண்டுஒரு டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. புதுச்சேரியைச் சேர்ந்த ஓட்டுநர் சுந்தரவடிவேல்(45) லாரியை ஓட்டினார். குறிஞ்சிப்பாடி அருகே பெத்தநாயன்குப்பம் பகுதியில் லாரி செல்லும் போது டேங்கரில் கசிவு ஏற்பட்டு ஆசிட்சாலையில் கொட்டியது. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற கும்முடிமுலை கிராமத்தைச் சேர்ந்த கண் ணன்(44), இளவரசன்(50). மீனாட்சிபேட்டையைச் சேர்ந்த வேலாயுதம்(35), நெய்வேலி எஸ்பிடி நகரை சேர்ந்த பிரபு(44), மினி லாரியில் சென்ற ஆபத்தானபுரம் பகுதியைச் சேர்ந்த சகாயஆரோக்கியதாஸ்(47) ஆகியோர் மீது ஆசிட் பட்டு காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த குறிஞ்சிப்பாடி தீயணைப்பு வீரர்கள் அவர்களை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் கண்ணன், இளவரசன், பிரபு, சகாயஆரோக்கியதாஸ் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.