விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த ஒப்பந்த செவிலியர்கள். 
Regional01

விழுப்புரம் அரசு மருத்துவ மனையில் - வேலை வழங்கக்கோரி ஒப்பந்த செவிலியர்கள் மனு :

செய்திப்பிரிவு

விழுப்புரம் அரசு மருத்துவ மனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய செவிலியர்கள், ஆட்சியரிடம் நேற்று மனு அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பது:

கரோனா தொற்று காரணமாக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த கால அடிப்படையில் செவிலியரா பணியமர்த்தப்பட்டோம். இந்தப் பணியை சேவையாக செய்வதற்காக ஏற்கெனவே செய்த வேலையில்இருந்து விடுபட்டு இப்பணியில் சேர்ந்துள்ளோம்.

ஆனால், தற்போது கரோனா தொற்று குறைந்த காரணத்தால் எங்களை ஒப்பந்தகால செவிலியர்களை பணியிலிருந்து நீக்கிவிட்டனர். இதனால், எங்களதுவாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே எங்களைப்போன்ற ஒப்பந்தகால செவிலி யர்களை குறைந்த ஊதியத்திலாவது பணியமர்த்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT