Regional01

மகளிர் குழுவுக்கு கடன் வழங்க நடவடிக்கை : அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

செய்திப்பிரிவு

திண்டுக்கல் மாவட்டம் சின்னாள பட்டியில் திருமண நிதி உதவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆட்சியர் ச.விசாகன் தலைமை வகித்தார். மாவட்ட சமூக நல அலுவலர் புஷ்பகலா வரவேற்றார்.

நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில், பெண்களின் வாழ்வாதாரம் மேம்பட மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கூட்டுறவுத் துறை மூலம் அதிக அளவில் கடன் வழங்கப்படும். கூட்டுறவுத் துறை மூலம் நெசவாளர்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

SCROLL FOR NEXT