Regional02

குண்டர் சட்டத்தில் 2 பேர் சிறையில் அடைப்பு :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி அருகேயுள்ள தருவைகுளம் நவமணி தெருவைசேர்ந்தவர் அந்தோணி சதீஷ்குமார் என்ற சதீஷ் (41), சிலுவைப்பட்டி கணபதி நகரை சேர்ந்த சாமுவேல் மகன் ஜோதிராஜா (35). இருவரையும் கொலை முயற்சி வழக்கு தொடர்பாக தாளமுத்துநகர் போலீஸார் கடந்த 18-ம் தேதி கைது செய்தனர்.

இந்நிலையில் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க எஸ்பி ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில் ஆட்சியர் கி.செந்தில் ராஜ் உத்தரவிட்டார். அதன்பேரில் இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT