Regional01

ரங்கம் ரங்கநாதர் கோயிலில் புதுக் கணக்கு தொடக்கம் :

செய்திப்பிரிவு

ரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் பசலி ஆண்டு தொடக்க நாளான நேற்று புதுக் கணக்கு தொடங்கப்பட்டது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் பசலி ஆண்டுக்கு பெருமாள், தாயார், சக்கரத்தாழ்வார் பெயர்களில் புதுக் கணக்குகள் தொடங்கப்படும். இந்த ஆண்டும் புதிய பசலி ஆண்டுக்கான கணக்குகள் நேற்று தொடங்கப்பட்டன. இதையொட்டி கணக்கு புத் தகங்கள், ரசீது புத்தகங்கள் ஆகியவற்றை பெருமாள், தாயார், சக்கரத்தாழ்வார் சந்நதிகளில் வைத்து பூஜைகள் செய்யப்பட்டு, புதுக் கணக்குகள் தொடங்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து கோயில் அலுவலகத்தில் கோயில் பணியாளர்கள், தொழில் செய்வோர் பெருமாள், தாயார், சக்கரத்தாழ்வார் பெயர்களில் காணிக்கை செலுத்தி ரசீது பெற்றுக்கொண்டனர்.

இந்தநிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி, அர்ச்சகர் சுந்தர் பட்டர் மற்றும் கோயில் ஊழியர்கள் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT