அரியலூரில் 48, கரூரில் 46, மயிலாடுதுறையில் 30, நாகப்பட்டினத்தில் 36, பெரம்பலூரில் 29, புதுக்கோட்டையில் 73, தஞ்சாவூரில் 248, திருவாரூரில் 67, திருச்சியில் 198 என மத்திய மண்டலத்தில் மொத்தம் 775 பேருக்கு புதிதாக கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களில், அரியலூர் மற்றும் நாகப்பட்டினத்தில் தலா 2, பெரம்பலூரில் 3, புதுக்கோட்டையில் 1, தஞ்சாவூரில் 23, திருவாரூரில் 5, திருச்சியில் 4 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர்.
காரைக்கால் மாவட்டத்தில் நேற்று பெறப்பட்ட 697 பரிசோதனை முடிவுகளில் 24 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றுடன் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார்.