தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகளை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
Regional01

தூத்துக்குடி விமான நிலைய பணிகள் ஆய்வு :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் நேற்று ஆய்வு செய்தார்.

விமான நிலையத்தில் தடுப்புச் சுவர் கட்டும் பணி, வெடிகுண்டு செயலிழக்கும் அறை, தீயணைப்பு துறையினருக்கான பயிற்சி ஒத்திகை பார்க்கும் இடம், சாலைப் பணிகள், விமான கட்டுப்பாட்டு அறை, விமான ஓடுதளம் விரிவாக்கப் பணி போன்றவற்றை அவர் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, விமான நிலைய அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. விமான நிலைய இயக்குநர் என்.சுப்பிரமணியன், எஸ்பி எஸ்.ஜெயக்குமார் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT