சேத்துப்பட்டு பகுதியில் ஓரே நாளில் 175 மி.மீ., மழை பெய் துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன் தினம் நள்ளிரவு, பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. இதில், சேத்துப்பட்டு மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் மட்டும் நள்ளிரவு தொடங்கிய மழை, விடிய விடிய கொட்டி தீர்த் துள்ளது.
இதனால், நேற்று காலை நிலவரப்படி, அதிகபட்சமாக 175 மி.மீ., பெய்துள்ளது. மேலும், ஆரணி பகுதியில் 1 மி.மீ., செய்யாறு பகுதியில் 9 மி.மீ., செங்கம் பகுதியில் 2.6 மி.மீ., ஜமுனாமரத்தூர் பகுதி யில் 3 மி.மீ., போளூர் பகுதியில் 12.4 மி.மீ., தி.மலை பகுதியில் 2 மி.மீ., தண்டராம்பட்டு பகுதியில் 7 மி.மீ., கலசப்பாக்கம் பகுதியில் 15.4 மி.மீ., கீழ்பென்னாத்தூர் பகுதியில் 9 மி.மீ., மற்றும் வெம் பாக்கம் பகுதியில் 4.2 மி.மீ., மழை என மாவட்டத்தில் சராசரியாக 20 மி.மீ, மழை பெய்துள்ளது.
வேலூர் மாவட்டம்
மேலும், வேலூரில் 15.6, காட்பாடியில் 25.4, குடியாத் தத்தில் 5.6, மேல்ஆலத்தூரில் 7.2, பொன்னையில் 18.2 மி.மீ மழையும், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் 87.8, அரக் கோணத்தில் 10.6, ஆற்காட்டில் 56, காவேரிப்பாக்கத்தில் 32, சோளிங்கர் 48, அம்மூரில் 36, கலவையில் 8.2 மி.மீ மழை பதிவானது.
திருப்பத்தூர் மாவட்டம்
கனமழை காரணமாக ஆம்பூர், மிட்டாளம், வடப்புதுப்பட்டு, மாதனூர், நாட்றாம்பள்ளி, கேதாண்டப்பட்டு, ஆலங்காயம், திருப்பத்தூர் போன்ற பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப் பட்டது.
கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருவதால் வாணியம்பாடி அடுத்த அலசந்தரா புரம், திம்மாம்பேட்டை, நாராயண புரம் ஆகிய பகுதிகளில் உள்ளமண்ணாற்றில் மழைவெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதைக் கண்ட பொதுமக்கள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.
மழையளவு விவரம்
ஆலங்காயம் 15.8 மி.மீ., ஆம்பூர் 17.6 மி.மீ., வடபுதுப்பட்டு 33.2 மி.மீ., நாட்றாம்பள்ளி 40 மி.மீ., கேத்தாண்டப்பட்டி 35 மி.மீ., வாணியம்பாடி 7 மி.மீ., திருப்பத்தூர் 20 மி.மீ., என மொத்தமாக 168.7 மி.மீ., அளவுக்கு மழையளவு பதிவாகியிருந்தன.