BackPg

தொகுதி மறுசீரமைப்பு ஆலோசனை ஜம்மு காஷ்மீர் செல்கிறது ஆணையம் :

செய்திப்பிரிவு

அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாட தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் வரும் 6-ம் தேதி ஜம்மு காஷ்மீர் செல்கிறது.

யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் கடந்த ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட்டது. தொகுதி மறுசீரமைப்பு பணிகளை ஆணையம் சில மாதங்களின் முடித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஜூலை 6 முதல் 9-ம் தேதி வரை 4 நாள் பயணமாக தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் ஜம்மு காஷ்மீர் செல்கிறது. அப்போது அரசியல் கட்சிகள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆணைய உறுப்பினர்கள் கலந்துரையாட உள்ளனர். இது தொடர்பான முடிவு டெல்லியில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

இதனிடையே இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திராவும் பங்கேற்பார் என கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT