பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி. 
Regional02

கோவை விமான நிலையத்தில் பார்சலில் இருந்த துப்பாக்கி பறிமுதல் :

செய்திப்பிரிவு

கோவை பீளமேடு விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டின் முக்கியப் பகுதிகளுக்கும், சில வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. தினசரி ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர்.

விமான நிலைய வளாகத்தின் ஒரு பகுதியில் சரக்கு சேவைப்பிரிவு உள்ளது. இங்கு நேற்று காலை வழக்கம்போல் பயணிகள், பொதுமக்கள் அளித்த சரக்குகளை அங்கிருந்த பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது கோவையில் இருந்து டெல்லி செல்லும் விமானத்தில் அனுப்புவதற்காக வந்த சரக்கு பார்சலில் கைத் துப்பாக்கி இருப்பது ஸ்கேன் பரிசோதனை மூலம் தெரிந்தது. இதையடுத்து அந்த பார்சலை அதிகாரிகள் பிரித்து சோதனை செய்து அதில் துப்பாக்கி இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து விமான நிலைய பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் பீளமேடு போலீஸாரிடம் புகார் அளித்தனர். போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT