Regional03

ஆனைமலையில் 7 வாரங்களுக்கு பிறகு : நடைபெற்ற கொப்பரை ஏலம் :

செய்திப்பிரிவு

பொள்ளாச்சி: ஊரடங்கால் மூடப்பட்ட ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 7 வாரங்களுக்கு பின்னர் நேற்று முன்தினம் நடைபெற்ற ஏலத்தில் 348 குவிண்டால் கொப்பரை ரூ.30.62 லட்சத்துக்கு விற்பனையானது.

இதுகுறித்து விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் கூறும்போது, “ஆனைமலை சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த விவசாயிகள், 725 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். வியாபாரிகள் முன்னிலையில், அவற்றை தரம்பிரித்து ஏலம் விட்டதில், முதல்தரக் கொப்பரை 398 மூட்டைகள் குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் ரூ.10,015-க்கும், அதிகபட்சம் ரூ.10,670-க்கும் விற்பனையாகின. இரண்டாம் தரக் கொப்பரை 327 மூட்டைகள், குவிண்டாலுக்கு அதிகபட்சம் ரூ.8,500-க்கும், குறைந்தபட்சம் ரூ.7,000-க்கும் விற்பனையானது. 9 வியாபாரிகள், 117 விவசாயிகள் ஏலத்தில் பங்கேற்றனர். கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 7 வாரங்களாக ஏலம் நடைபெறவில்லை. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 348 குவிண்டால் கொப்பரை ரூ.30.62 லட்சத்துக்கு ஏலமிடப்பட்டது’’ என்றார்.

SCROLL FOR NEXT