பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புக்கான தொழில்முனைவோர் மாதிரி என்ற திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் கார்மேகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் தொழில்முனை வோர்களை ஊக்குவித்து அவர்களை மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பில் அதிக முதலீடு செய்திடும் நோக்கில், பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புக்கான தொழில்முனைவோர் மாதிரி திட்டம் செயல்படுத்தப் படவுள்ளது.
மீனவர்கள், மீன் வளர்ப்போர், சுய உதவிக் குழுக்கள், கூட்டு பொறுப்பு குழுக்கள், மீன் வளர்ப்போர் உற்பத்தியாளர் அமைப்புகள், தனிநபர் தொழில் முனைவோர், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டோர் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ் பொது பிரிவினருக்கு 25 சதவீதம் மத்திய மற்றும் மாநில அரசின் நிதியுதவியும் மொத்த திட்ட மதிப்பீட்டில் மானியத் தொகையின் உச்ச வரம்பு ரூ.1.25 கோடி மற்றும் மாநில அரசின் நிதியுதவியும் மொத்த திட்ட மதிப்பீட்டில் மானியத் தொகையின் உச்ச வரம்பு ரூ.1.50 கோடி வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகம், கொளத்தூர் ரோடு, பார்க் எதிரில், மேட்டூர் அணை என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், அலுவலகத்தை 04298-244045 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். வரும் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் மற்றும் கூடுதல் விவரங்களை www.fisheries.tn.gov.in என்றஇணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித் துள்ளார்.