Regional02

திருவள்ளூர் அருகே கிணற்றில்தவறி விழுந்த புள்ளி மான் மீட்பு :

செய்திப்பிரிவு

மப்பேடை அடுத்துள்ள வயலூர் கிராமத்தில் உள்ள சுமார் 30 அடி ஆழமுள்ள கிணற்றில், வனப்பகுதியிலிருந்து வந்த 2 வயதுடைய ஆண் புள்ளி மான் ஒன்று தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது.

இதுகுறித்து, விவசாயிகள் மப்பேடு போலீஸார் மற்றும் திருவள்ளூர் வனத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

பேரம்பாக்கம் தீயணைப்புத் துறையினர் அந்த மானை உயிருடன் மீட்டு, வனத் துறையிடம் ஒப்படைத்தனர்.

பின்னர், அந்த மானை வனத் துறையினர் பூண்டி காப்புக் காட்டில் பாதுகாப்பாக விட்டனர்.

SCROLL FOR NEXT