Regional03

தேங்காய் நார் தயாரிக்கும் நிறுவனத்திற்கு தீ வைப்பு :

செய்திப்பிரிவு

கோட்டக்குப்பத்தை அடுத்த கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (48). இவர் அப்பகுதியில் தேங்காய் நார் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை மர்ம நபர்கள், முகத்தில் துணியை கட்டிக்கொண்டு அந்த நிறுவனத்தின் உள்ளே புகுந்து தீ வைத்ததோடு, அங்குள்ள வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி லாரிக்கும் தீ வைத்து விட்டு, தப்பிச்சென்று விட்டனர்.

இதில் தீ மளமளவென பரவி, தேங்காய் நார்கள் கொழுந்து விட்டு எரிந்தன. இத்தகவல் அறிந்த வானூர் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் அந்நிறுவனம் முழுவதும் தீயில் எரிந்து சேதமடைந்தது. சேத மதிப்பு ரூ. 5 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT