Regional02

உரம், பூச்சிக்கொல்லி மருந்து - விலை, தரம் குறித்து விவசாயிகள் புகார் தெரிவிக்கலாம் :

செய்திப்பிரிவு

மதுரை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் த.விவேகானந்தன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மதுரை மாவட்டத்தில் உள்ள உர விற்பனை நிலையங்களில் அனுமதி பெறாத உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்றாலோ, நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லரை விலைக்குமேல் உரங்களை விற்பனை செய்தாலோ உரக்கட்டுப்பாடு மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து விலை மற்றும் தரம் குறித்து புகார்களை வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) - 97516 23274 மற்றும் வேளாண்மை அலுவலர் (தரக் கட்டுப்பாடு) – 98940 65925 ஆகியோரிடம் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT