மதுரை மாவட்டம், மேலூர் அருகே மேலவளவில் முன்னாள் ஊராட்சித் தலைவர் முருகேசன் உள்ளிட்ட 7 பேர் கொலை செய்யப்பட்டதன் 24-ம் ஆண்டு நினைவு தினம், மேலவளவில் உள்ள விடுதலைக் களத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் அனு சரிக்கப்பட்டது.
அங்குள்ள உருவச் சிலைக்கு மார்க்சிஸ்ட் கட்சி புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன் தலைமை யிலான கட்சியினர் மாலை அணிவித்தனர். விடுதலை சிறுத் தைகள் சார்பில், அக்கட்சியின் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் சிந்தனை செல்வன், பாபு, பாலாஜி, ஷாநவாஸ் ஆகியோர் நினை விடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில பொருளாளர் லிங்கம், மதுரை புறநகர் மாவட்ட செயலர் காளி தாஸ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.