Regional02

ரயில்களை இயக்க கோரிக்கை :

செய்திப்பிரிவு

செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்க நிர்வாகிகள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

அதில், “கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், சென்னையில் ரயில் போக்குவரத்து வசதிகளை மக்கள் பெற்றுள்ளனர். தொற்று குறைவாக உள்ள தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை போன்ற தென் மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் வசதிக்காக கடந்த ஓராண்டாக ஓடாமல் உள்ள பயணிகள் ரயில்களை 50 சதவீத இருக்கைகளுடன், முன்பதிவு வசதியுடைய எக்ஸ்பிரஸ் ரயில்களாக இயக்க வேண்டும்.

செங்கோட்டை- மதுரை, செங்கோட்டை- திருநெல்வேலி, திருநெல்வேலி- திருச்செந்தூர், திருநெல்வேலி- தூத்துக்குடி பயணிகள் ரயில்களை உடனடியாக இயக்க தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு பரிந்துரை செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளனர்.

SCROLL FOR NEXT