Regional03

ரூ.7.29 லட்சம் திருட்டு :

செய்திப்பிரிவு

திருச்சியிலுள்ள உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் கிளைகளுக்கு பொருட்களைப் பிரித்து அனுப்புவதற்கான குடோன் சென்னை புறவழிச்சாலையில் செயல்பட்டு வருகிறது. இங்கு 40 பேர் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 27-ம் தேதி இரவு பணி முடிந்து, குடோனைப் பூட்டிவிட்டுச் சென்றுவிட்டனர்.

மறுநாள் காலை மீண்டும் திறந்து பார்த்தபோது, மேஜைக்குள் வைக்கப்பட்டிருந்த ரூ.7.29 லட்சம் காணவில்லை. இதுகுறித்து குடோன் மேலாளர் வசந்தன் அளித்த புகாரின்பேரில் கோட்டை குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT