படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்கு வதற்கு ஏதுவாக தென்காசி மாவட்ட தொழில் மையம் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு உருவாக் கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் திட்ட மதிப்பீடு ரூ.15 லட்சம் வரையிலான உற்பத்தி சார்ந்த தொழில்கள், ரூ.5 லட்சம் வரையிலான சேவை சார்ந்த தொழில்கள் மற்றும் ரூ.5 லட்சம் வரையிலான வியாபாரம் சார்ந்த தொழில்கள் தொடங்க 25 சதவீத அரசு மானியத்துடன் வங்கிக் கடன் பெறலாம். அதிகபட்சமாக உற்பத்தி பிரிவுக்கு ரூ.2.50 லட்சம், சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.1.25 லட்சம் மானியமாக வழங்கப்படும். www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தொழில் முனைவோர்
பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டம்
விண்ணப்பத்தில் ஏஜென்ஸி DIC என்று குறிப்பிட வேண்டும்.
இத்திட்டங்கள் தொடர்பான விளக்கங்களுக்கு 8778074528 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்தக வலை தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.