தூத்துக்குடி மாவட்டம் வசவப்பபுரம் பரம்பு பகுதியில் காணப்படும் பாறைக்கிண்ணங்களை பார்வையிடும் தொல்லியல் ஆர்வலர்கள். (உள்படம்) வசவப்பபுரம் பரம்பு பகுதியில் காணப்படும் பாறைக்கிண்ணங்கள். 
Regional02

வசவப்பபுரம் பரம்பு பகுதியில் பழங்கால பாறைக்கிண்ணங்கள் : அகழாய்வு செய்ய தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டம் வசவப்பபுரம் பரம்பு பகுதியில் ஏராளமான பாறைக்கிண்ணங்கள் காணப்படுகின்றன. இப்பகுதியை அகழாய்வு செய்ய வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி- திருநெல்வேலிதேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கிராமம் வசவப்பபுரம். இங்குபெரிய பரம்பு பகுதி உள்ளது. இதன் அருகே திருநங்கைகளுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

இவ்வீடுகளை கட்டுவ தற்காகவும், தூத்துக்குடி- திருநெல்வேலி நான்குவழிச் சாலை பணிக்காகவும் இங்கிருந்து சரள் மண்ணை தோண்டி எடுத்துள்ளனர். அண்மையில் பெய்த மழையால் இப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு பூமிக்குள் புதைந்து கிடந்த ஏராளமான முதுமக்கள் தாழிகள் வெளியே தெரிகின்றன.

பாறைக்கிண்ணங்கள்

இது குறித்து சுதாகர் கூறியதாவது: சாலைகள் அமைக்கவும், வீடு கட்டவும் இந்த பகுதியில் இருந்து கல் மற்றும் சரள் எடுத்த போது ஒரு தாழி உடைந்துள்ளது. அதனுள் ஒரு வாள் இருந்ததாகவும், அதை வருவாய்த் துறையினர் கையகப்படுத்தியதாகவும் ஊர் மக்கள் கூறுகின்றனர்.

ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்டவை

நாட்டு மருந்து தயாரிக்க சில பொருட்களைப் பாறையில் வைத்து அரைத்ததால் இக்குழிகள் உருவாகியிருக்க வேண்டும் எனக் கணிக்கத் தோன்றுகிறது. இந்த குழிகளை பல ஆயிரம் ஆண்டுகள் முன் உருவாக்கியிருக்க வேண்டும் என்பது எனது கணிப்பு. தமிழக அரசு வசவப்பபுரத்தில் விரைவாக அகழாய்வு செய்ய வேண்டும் என்றார்.

100 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிச்சநல்லூரை ஆய்வு செய்தஇங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் இரியா தாமிரபரணி கரையில் 37 இடங்களை ஆய்வு செய்ய வேண்டும் என குறிப்பு எழுதி வைத்துள்ளார். அதில்வசவப்பபுரம் பரம்பும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தாமிரபரணி கரையில் அகழாய்வு களங்களைத் தேடும் பணியை மாநில தொல்லியல் துறையினர் தற்போது தொடங்கியுள்ளனர். வசவப்பபுரம் பரம்பை அவர்கள்ஆய்வு செய்து அகழாய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

SCROLL FOR NEXT