Regional02

இளம்பெண் கொலை: தந்தை கைது :

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள தெற்கு காவலாக்குறிச்சியைச் சேர்ந்தவர் மாரிமுத்து(45). இவரது மகள் ஷாலோம் ஷீபா(18).இவர், இதே பகுதியைச் சேர்ந்த சமுத்திரக்கனி என்பவரது மகன் முத்துராஜ் என்பவரை காதலித்துள்ளார். கடந்த ஓராண்டுக்கு முன்பு முத்துராஜை திருமணம் செய்துள்ளார். இருவரும் வெளியூரில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், தெற்கு காவலாக்குறிச்சியில் கோயில் திருவிழாவுக்காக கணவருடன் சொந்த ஊருக்கு ஷாலோம் ஷீபா வந்துள்ளார். நேற்று அதிகாலையில் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, தந்தை வீட்டுக்கு ஷாலோம் ஷீபா சென்றுள்ளார். ஆத்திரம் அடைந்தமாரிமுத்து, அரிவாளால் தனது மகளை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஷாலோம் ஷீபா உயிரிழந்தார். ஊத்துமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து, மாரிமுத்துவை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT