Regional03

இலங்கைக்கு கடத்த முயன்ற 2,550 கிலோ மஞ்சள் பறிமுதல் :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி அருகேயுள்ள பட்டினமருதூர் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

ஆய்வாளர் விஜய அனிதா மற்றும் போலீஸார் அந்த பகுதியில் நேற்று அதிகாலை 1 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கடற்கரையில் சரக்கு வேனில் இருந்து சிலர் மஞ்சள் மூட்டைகளை படகில் ஏற்றிக்கொண்டிருந்தனர். போலீஸாரை கண்டதும் அந்த நபர்கள் மற்றொரு படகில் கடலுக்குள் தப்பிச் சென்று விட்டனர்.

சரக்கு வேனில் இருந்த தலா 30 கிலோ எடை கொண்ட 85 மூட்டை மஞ்சளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கடத்தலுக்கு பயன் படுத்தப்பட்ட சரக்கு வேன், பைபர் படகு மற்றும் 5 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

SCROLL FOR NEXT