Regional01

‘அனைத்து கோயில் பூசாரிகளுக்கும் கரோனா நிவாரணம் வழங்க வேண்டும்’ :

செய்திப்பிரிவு

அனைத்து இந்து கோயில்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அம் மனுவில் கூறியிருப்பதாவது, ‘‘கோயில் பூசாரிகள் மற்றும் பணியாளர் களுக்கு அரசு சார்பில் கரோனா உதவித்தொகை ரூ.4 ஆயிரம் மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுகிறது.

அனைத்து இந்து கோயில்கள் பாதுகாப்பு கூட்டமைப்பில் 200 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். எனவே, அனைத்து கோயில் பூசாரிகளுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும். மேலும், கிராமங்களிலுள்ள கோயில்களை திறந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும்’’ என மனுவில் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT