Regional01

குக்கரில் சாராயம் காய்ச்சியவர் கைது :

செய்திப்பிரிவு

கோவை கே.கே.நகர் எம்.கே.ஜி வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பதாக சாயிபாபா காலனி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் ஆய்வாளர் ரேணுகாதேவி தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டபோது, கையில் கேனுடன் நின்றவரை பிடித்து விசாரித்தனர்.

அவர், கே.கே.நகரைச் சேர்ந்த மோகன்(47) என்பதும், ஜவுளிக்கடை நடத்தி வந்ததும் தெரியவந்தது. ஊரடங்கால் ஜவுளிக்கடைகள் திறக்கப்படாததாலும், மதுக்கடைகள் மூடப்பட்டதாலும், யூ- டியூப்பை பார்த்து, வீட்டில் உள்ள குக்கரில் மோகன் கள்ளச் சாராயம் காய்ச்சி, ஒரு லிட்டர் ரூ.2 ஆயிரத்துக்கு விற்றுள்ளார். இதையடுத்து, மோகனை போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT