ராமேசுவரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட மீனவர்கள். 
Regional02

பாம்பன் கல்லறை தோட்டத்தில் சர்வே செய்ததால் அதிருப்தி - விஏஓவை சிறைபிடித்து மீனவர்கள் மறியல் :

செய்திப்பிரிவு

கல்லறைத் தோட்டத்தை சர்வே செய்ததால் பாம்பனில் கிராம நிர்வாக அலுவலரை சிறைப் பிடித்து மீனவர்கள் நேற்று மறிய லில் ஈடுபட்டனர்.

ராமேசுவரம் பாம்பன் பிரான்சிஸ் நகரில் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்துக்கு உட்பட்ட கல்லறைத் தோட்டம் ஒன்று உள்ளது. இந்த கல்லறைத் தோட்டத்தில் மண்டபம் அதிமுக நகர் செயலாளர் சீமான் மரைக்காயர் என்பவரது பட்டா நிலத்தை சர்வே செய்ய, பாம்பன் விஏஓ பன்னீர்செல்வம் சீமான் மரைக்காயருடன் சம்பந்தப்பட்ட இடத்தை அடையாளம் காண கல்லறைத் தோட்டம் சென்றார்.

அங்கு சென்று இடத்தைப் பார்த்து விட்டு அலுவலகம் திரும்பினார். இந்நிலையில், பிரான்சிஸ் நகர் மீனவர்கள் ஒன்று திரண்டு விஏஓவை அலுவலகத்தில் வைத்து பூட்டி விட்டு ராமேசுவரம்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வட்டாட்சியர் மார்ட்டின் ராஜ் மற்றும் மண்டபம் காவல் ஆய்வாளர் ஜீவரத்தினம் ஆகியோர் மீனவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் பின்னர், மீனவர்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT