ஆரல்வாய்மொழி அருகே தென்னந்தோப்பு ஒன்றில், ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. பூதப்பாண்டி போலீஸார் ஆய்வு செய்தனர். அங்கு சாக்கு மூட்டைகளில் 5 டன் ரேஷன் அரிசி அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதனை இரு மினி டெம்போக்களில் ஏற்றி கேரளாவுக்கு கடத்திச் செல்ல வைத்திருந்தனர். 2 மினி டெம்போ மற்றும் 5 டன் ரேஷன் அரிசியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.