திருச்சி வாழவந்தான்கோட்டை மற்றும் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம்களில் மாநில சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியது: முகாம் வாசிகள் விடுத்த கோரிக்கைகளில் 75 சதவீதம் அடுத்த மாதத்தில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கைத் தமிழர் களுக்கு கரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மளிகைப் பொருட்கள் வழங்குவது முதல்வரின் பரிசீலனையில் உள்ளது.
இலங்கைத் தமிழர் முகாம்களில் இடநெருக்கடி உள்ளதால், அடுக் குமாடி குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இலங் கைத் தமிழர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் முதல்வர் நிறைவேற்றித் தருவார்.
திருச்சி மத்திய சிறை வளாகத் தின் சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து காவல் துறை மூலம் ஆய்வு செய்து, அறிக்கை அளிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தர விடப்பட்டுள்ளது. இவர்களுக்கு விரைவில் நல்ல முடிவு வரும் என்றார்.
ஆய்வின்போது, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்.பி திருச்சி சிவா, எம்எல்ஏக்கள் எஸ்.இனிகோ இருதயராஜ், பி.அப்துல் சமது, அகதிகள் மறுவாழ்வு மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நல ஆணையத்தின் ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு ஆகியோர் உடனிருந்தனர்.
வாழவந்தான்கோட்டை அகதிகள் முகாம் ஆய்வின்போது, அங்கன்வாடி கட்டிடம் கட்டித் தர வேண்டும். குடிநீர்ப் பிரச்சினையை களையவும், சீரான மின்சாரம் வழங்கவும், மாதத்துக்கு 2 முறை ஆள் தணிக்கை செய்வதில் உள்ள நடைமுறை சிக்கல்களைக் களையவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முகாம்வாசிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, வாழவந்தான் கோட்டை முகாமில் ரூ.25 லட்சத் தில் குடிநீர்ப் பணிகள் மேற் கொள்ளவும், மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதி கீழ் ரூ.6 லட்சத் தில் அங்கன்வாடி கட்டிடம் கட்டவும் ஆட்சியர் சு.சிவராசு உடனடி ஒப்புதல் வழங்கினார்.