கரூர் மாவட்டம் மகாதானபுரம் அருகேயுள்ள ஓமாந்தூரைச் சேர்ந்தவர் வீராசாமி(32). தையல் காரர். இவருக்கும் பிளஸ் 2 படிக்கும் 17 வயது சிறுமிக்கும் பவித்திரத்தில் அண்மையில் திருமணம் நடைபெற்றது.
க.பரமத்தி வட்டார சமூக நல அலுவலர் விஜயசாமுண்டீஸ் வரி, கரூர் அனைத்து மகளிர் போலீஸில் நேற்று அளித்த புகாரின் பேரில், வீராசாமி, சிறுமி யின் தந்தை உள்ளிட்டோர் மீது போக்ஸோ மற்றும் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.