திருச்சி: கரோனா ஊரடங்கு காரணமாக திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதிக்குட்பட்ட துளையாநத்தம், ஜம்புநாதபுரம், மங்கலம் ஆகிய ஊராட்சிகளில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை, எளியோர் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
மண்ணச்சநல்லூர் தொகுதி எம்எல்ஏ எஸ்.கதிரவன் தனது சொந்த நிதியிலிருந்து ரூ.5 லட்சம் செலவில் 400-க்கும் மேற்பட்டோருக்கு தொழிலதிபர் கே.என்.அருண் நேரு முன்னிலையில் நிவாரண உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலாளர்கள் சேகரன் (தாத்தையங்கார்பேட்டை), ராமச்சந்திரன் (முசிறி மேற்கு), ஊராட்சித் தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.