Regional02

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் வழங்க ஆய்வுக் கூட்டம் :

செய்திப்பிரிவு

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் வழங்குவது குறித்து வங்கியாளர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கத்தில், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் வழங்குவது குறித்து வங்கியாளர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் கொடுப்பதற்கு ஏதுவாக, வங்கிகளுக்கான கடன் இலக்கு, கடன் தொகையை அதிகரித்து வழங்குதல், தொழில் முனையும் மகளிர் குழுக்களுக்கும், குழு உறுப்பினர்களுக்கும், சாலையோர வியாபாரிகளுக்கும் கடன் வழங்குதல் போன்ற அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில், மகளிர் திட்ட இயக்குநர் லேகா, முன்னோடி வங்கி மேலாளர் எழிலரசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT