காரைக்கால்: காரைக்கால் மாவட்ட ஆட்சியர், காரைக்கால் விற்பனைக் குழுத் தலைவர் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, கடந்த ஆண்டை போலவே நிகழாண்டும், பருத்தியை ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை மாலை ஏலம் மூலம் விற்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி, நேற்று முன்தினம் காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது.
இதில், காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு, தாங்கள் விளைவித்த 85 குவிண்டால் பருத்தியை கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்தனர். பருத்தியின் தரத்துக்கு ஏற்ப, அதிகபட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.7,079, சராசரி விலையாக ரூ.6,780 என வியாபாரிகளால் விலை நிர்ணயிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது. வேளாண் துணை இயக்குநரும், காரைக்கால் விற்பனைக் குழு செயலாளருமான ஆர்.கணேசன், விற்பனைக் குழு ஊழியர்கள் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது.