Regional01

நெல்லையில் 2-வது நாளாக பலத்த பாதுகாப்பு :

செய்திப்பிரிவு

பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதி முத்துமனோ கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், சிறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அவரது சடலத்தை வாங்கமறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆதார்,ரேஷன் அட்டைகளை திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க வந்த உறவினர்கள் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டனர்.

இதையொட்டி முத்து மனோவின் சொந்த ஊரான வாகைகுளம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பாளையங்கோட்டை மத்திய சிறை, திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, வாகைகுளம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று 2-வது நாளாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முக்கிய இடங்களில் உள்ள செல்போன் கோபுரங்களும் கண்காணிக்கப்பட்டன.

SCROLL FOR NEXT