நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் கடல் சீற்றமாக காணப்படுகிறது. குறைந்த அளவிலேயே வள்ளம், கட்டுமரங்கள் கடலுக்கு சென்றன. கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் இரு நாட்களாக கடல் உள்வாங்கியது. ராஜாக்கமங்கலம் அருகே உள்ள அழிக்காலில் கடல் சீற்றத்தால் ஊருக்குள் கடல் நீர் புகுந்தது. இப்பகுதியினர் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக தங்கள் வீடுகளின் முன்பு மண் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர்.