Regional01

குழந்தையை விற்பனை செய்த வழக்கில் - வந்தவாசி அருகே தாய் உட்பட 5 பேர் கைது :

செய்திப்பிரிவு

வந்தவாசி அருகே குழந்தையை கடத்தி விற்பனை செய்த வழக்கில் திடீர் திருப்பமாக தாய் உட்பட 5 பேரை காவல் துறையினர் கைது செய் துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தாழம்பள்ளம் கிராமத்தில் வசிக்கும் சரத்குமார், பவானி ஆகியோர் காதலித்துள்ளனர். இவர்கள், இருவரும் திருப்பூரில் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வந்துள்ளனர். இதில், பவானிக்கு கடந்த ஜனவரி மாதம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், சரத்குமாருக்கு கடந்த 13-ம் தேதி வேறொரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

இது குறித்து வந்தவாசி காவல் நிலையத்தில் பவானி அளித் துள்ள புகாரில், ‘சரத்குமார் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், திருமணத்துக்கு முன்பு பிறந்த குழந்தையை உறவினர் ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு திருமணம் செய்து கொண்டதும், குழந்தையை மீட்டு கொள்ள லாம் என சரத்குமார் கூறியதை நம்பி குழந்தையை ஒப்படைத்ததாகவும், ஆனால் தனது குழந்தையை விற்று விட்டதாக’ தெரிவித்திருந்தார்.

அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ‘சென்னை மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த இடைத் தரகர்கள் மூலமாக மும்பையைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.5 லட்சத்துக்கு குழந்தை விற்பனை செய்யப் பட்டது தெரிய வந்தது.

இது தொடர்பாக வந்தவாசியில் வசிக்கும் இடைத்தரகர் தண்டு ஏழுமலை, சரத்குமார், ஈரோடு நந்தினி, கோபிசெட்டிபாளையம் ஜானகி ஆகிய 4 பேரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைது செய் தனர். இதற்கிடையில், மும்பைக்கு விற்பனை செய் யப்பட்ட குழந்தை மீட்கப்பட்டது.

மேலும், சென்னை மற்றும் ஈரோடு பகுதிகளைச் சேர்ந்த இடைத்தரகர்களை தேடி வந்தனர். அதில் கிடைத்த தகவலின் பேரில் சென்னை இடைத்தரகர்கள் ஜோதி, கலைவாணி, முனியம்மாள் மற்றும் ஈரோடு நதியா ஆகிய 4 பேரை நேற்று முன் தினம் கைது செய்தனர்.

முக்கிய இடைத்தரகரான ஜோதியிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சரத்குமாரும், பவானியும் முழு மனதுடன் சம்மதித்து குழந்தையை விற்றதும், இதற் காக எழுதப்பட்ட பத்திரத்தில் இருவரும் கையொப்ப மிட்டுள்ளதும் தெரியவந்தது. அதன்பேரில் குழந்தையின் தாய் பவானியும் கைது செய்யப்பட்டார்.

பின்னர், திருவண்ணா மலையில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழுவிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.

மேலும், சென்னையைச் சேர்ந்த இடைத்தரகர் அமுலுவை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT