Regional02

நாட்றாம்பள்ளி வட்டத்தில் உள்ள - நியாய விலை கடைகளில் ஆட்சியர் ஆய்வு :

செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட மல்லகுண்டா ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, 100 நாள் வேலை திட்ட பதிவேடு, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் பயன் பெற்ற பயனாளிகள் விவரம், பசுமை வீடு திட்ட பயனாளிகள் விவரம் அதற்கான பதிவேடு களை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து, அந்த ஊராட்சியில் மேற்கொள்ளப் பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை ஆட்சியர் அமர் குஷ்வாஹா ஆய்வு செய்து, நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஊராட்சி நிர்வா கத்தினருக்கு உத்தரவிட்டார்.

அதன்பிறகு, நாட்றாம் பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட சொரக்காயல்நத்தம், பச்சூர், கொத்தூர் ஆகிய கிராமங் களில் இயங்கி வரும் நியாய விலைக் கடைகளுக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா அங்கு பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் பொருட்களின் எடை யளவு, உணவு பொருட்கள் பொதுமக்களுக்கு முறையாக வழங்கப்படுகிறதா? கையிருப்பு உள்ள உணவுப்பொருட்களின் விவரம், ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ள பதிவேடுகளை அவர் ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து, மல்லகுண்டா ஊராட்சிக்கு உட்பட்ட பாரதிநகரில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

அப்போது, நாட்றாம்பள்ளி வட்டாட்சியர் மகாலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்முத்துச்செல்வி உட்பட பலர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT