மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் சுற்றிவரும் ‘பாகுபலி’ எனமக்களால் அழைக்கப்படும் காட்டுயானைக்கு, அதன் நடமாட்டத்தை கண்டறிய, ரேடியோ காலர் பொருத்தும் பணியை வனத்துறையினர் நேற்று முன்தினம் தொடங்கினர். நேற்று காலை யானைக்கு மயக்க ஊசியை செலுத்த முயன்றனர். ஆனால், ஊசி யானையின் உடலில் சரியாகப்படவில்லை. காலில் பட்டு கீழே விழுந்தது. இதைத் தொடர்ந்து, யானை மேடான பகுதியை நோக்கி செல்லத் தொடங்கியது. கல்லாறு வனப்பகுதியை ஒட்டியகோத்தகிரி மலைப் பாதை தொடக்கத்தில் இருந்து, சாலையை கடந்து வேடர் காலனிக்கு பின்புறம் உள்ள வனப்பகுதிக்குள் நுழைந்தது. இதையடுத்து, யானைக்கு மயக்க ஊசியை செலுத்தி, ரேடியோ காலர் பொருத்தும் பணியை வனத்துறையினர் 10 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். இருப்பினும் யானையின்நடவடிக்கைகளை தொடர்ந்துகண்காணிக்கும் வனத்துறையி னர், யானை இயல்பு நிலைக்கு வந்த பின்னர், பணியை மீண்டும் தொடர முடிவு செய்துள்ளனர்.