கூட்டுறவு சங்க மோசடி குறித்து விழுப்புரம் எஸ்பி அலுவலகத்துக்கு புகார் அளிக்க வந்த பொதுமக்கள். 
Regional01

சத்தியமங்கலம் கூட்டுறவு சங்கத்தில் ரூ.4 கோடி மோசடி: எஸ்பியிடம் புகார் :

செய்திப்பிரிவு

செஞ்சி அருகே சத்தியமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், நிரந்தர வைப்பு நிதி போலி ரசீது வழங்கி ரூ.4 கோடி மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

அதன் அடிப்படையில் கடந்த18-ம் தேதி முதல் கூட்டுறவு கள அலுவலர் அமர்நாத் தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த கூட்டுறவு சங்க செயலாளர் சாதிக்பாஷாவின் குடும்பத்தார், தற்போது பணியில் இருக்கும் பசுமலை, முருகன், விஜயராஜ் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்களின் புகாரை எழுத்து பூர்வமாக அளிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டுறவு சங்கத்தில் நிரந்தர வைப்பு தொகை செலுத்தி ஏமாந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் விழுப்புரம் எஸ்பி நாதாவிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.அப்புகார் மனுவில், "நாங்கள் நிரந்தர வைப்பு தொகையாக செலுத்திய பணம் வங்கிக்கணக்குகளில் வரவில்லை என கூட்டுறவு பணியாளர்கள் தெரிவித்து விட்டனர். எனவே இதன்மீது உரிய நடவடிக்கை எடுத்து நாங்கள் செலுத்திய தொகையை மீட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து வணிக குற்றப்புலனாய்வுத்துறை போலீ ஸாரை இப்புகார் மனு குறித்து விசாரணை மேற்கொள்ள உத்தர விட்டுள்ளதாக காவல் துறை வட் டாரங்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT