Regional01

ஈஸ்வரன் எம்.எல்.ஏ.வை கண்டித்து பா.ஜ.க, இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

சட்டப்பேரவையில் ‘ஜெய்ஹிந்த்' என்ற சொல்லை பயன்படுத்தாதது பெருமைக்குரிய விஷயம் என்று பேசிய ஈஸ்வரன் எம்.எல்.ஏ.வை கண்டித்து திண்டுக்கல் கிழக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜ.க ஒன்றியத் தலைவர் வரதராஜன் தலைமை வகித்தார். ஒன்றிய பொதுச்செயலாளர் சரவணன், ஒன்றியப் பொருளாளர் ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் கிழக்கு மாவட்டத் தலைவர் தனபாலன் பேசினார். கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில், அபிராமி அம்மன் கோயில் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கோட்டப் பொறுப்பாளர் சங்கர் கணேஷ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சஞ்சீவிராஜ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் அபிராமி அம்மன் கோயில் முன் 108 தேங்காய்கள் உடைக்கப்பட்டன. இதில் இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT