தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சமீபத்தில் மதுரை வந்தபோது வீரபாண்டி அரசு ஆரம்ப பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளியின் ஐந்தாம் வகுப்பு மாணவி பவித்ரா, அமைச்சர் முன் வாழ்வியல் தொடர்பான திருக்குறளை ஒப்புவித்தார். மாணவியின் பேச்சை முழுமையாக ரசித்து கேட்ட அமைச்சர் மாணவியைப் பாராட்டினார்.
மாணவி பவித்ராவை, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர் சங்கத்தின் (டாக்பியா) மதுரை மாவட்ட நிர்வாகிகள் பள்ளிக்கே சென்று பாராட்டினர்.
டாக்பியா மதுரை மாவட்ட செயலர் ஆ.ம.ஆசிரியதேவன், கிழக்கு ஒன்றியப் பொருாளாளர் ஜி.மூர்த்தி, மோகன் உள்ளிட்டோர் மாணவிக்கு சால்வை அணிவித்து நிதி உதவி வழங்கினர். பள்ளித் தலைமை ஆசிரியர் செல்வகுமரேசன் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.