Regional02

மணல் திருடிய 3 பேர் கைது :

செய்திப்பிரிவு

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே கலைஞான புரம் விலக்குப்பகுதியில் திருட்டுத்தனமாக மணல் அள்ளுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து குளத்தூர் சிறப்பு எஸ்ஐ சுப்பையா தலைமையிலான போலீஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது, அங்கு மணல் திருடிக்கொண்டிருந்த சாத்தான்குளம் தச்சன்விளை பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (54), ஜார்கன்ட் மாநிலத்தை சேர்ந்த பிண்டுரானா (30), வைகுண்டம் இடையற்காடு பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (54) ஆகியோரை கைது செய்தனர். மேலும், மணல் திருட பயன்படுத்திய 2 லாரிகள், ஒரு பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து குளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) கலா விசாரணை நடத்தி வருகிறார்.

SCROLL FOR NEXT