தூத்துக்குடி திரேஸ்புரம் முத்தரையர் காலனி கடற்கரை பகுதியில் சுற்றித்திரிந்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜோனாதன் தோர்ன்(47) என்பவரை கியூ பிரிவு போலீஸார் கடந்த 11-ம் தேதி மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவருக்கு மும்பையில் நடைபெற்ற போதை பொருள் கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதும், தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக அவர் தப்பிச் செல்ல முயன்றும் தெரிய வந்தது. இதையடுத்து ஜோனதன் தோர்ன்-ஐ கியூ பிரிவு போலீஸார் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் ஜாமீன் கோரி தூத்துக்குடி முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதித்துறை நடுவர் ராஜகுமரேசன், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.