கயத்தாறு காவல் நிலையத்தில் 2-ம் நிலை காவலர் கண்ணன் நேற்று முன்தினம் மாலையில் பணியில் இருந்தார். அப்போது, காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோலை ஊற்றி ஒருவர் தீ வைக்க முயன்றுள்ளார். இதை பார்த்த கண்ணன் தடுத்த போது, அவரை அந்த நபர் தாக்கிவிட்டு மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து சேதப்படுத்தினார்.
சக போலீஸார் தீ வைத்த நபரை பிடித்து விசாரித்ததில் அவர், கோவில்பட்டி கதிரேசன் கோயில் சாலை வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மாரியப்பசாமி (56) என்பது தெரியவந்தது. போலீஸார் அவரை கைது செய்தனர்.
இதுபோல் கயத்தாறு பிரதான சாலையில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்த மர் மநபர், இயந்திரம் மற்றும் பிரிண்டிங் பேப்பர்களை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து சேதப்படுத்தி உள்ளார். போலீஸார் அவரை தேடி வருகின்றனர்.